தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது

தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது

தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரையில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தில்லியில் 2016-இல் ஒரு மாணவர் மர்மமாக இறந்த நிலையில், தற்போது அதேபோல இரண்டாவதாக இன்னொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனைக்குரியது. இத்தகைய மர்ம மரணங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து, அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக மாணவர்களுக்காக பாதுகாப்பு மற்றும் ஆலோசனை மையத்தைத் திறக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் ஏற்கெனவே பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெளியிடும் தகவல்களால் மக்கள் மத்தியில் மேலும் சந்தேகங்கள் எழுகின்றன. அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையம், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். 
உள்ளாட்சி வார்டு மறுவரையறையில் பல்வேறு குளறுபடிகள் நீடிக்கின்றன. முதல்கட்டப் பணியிலேயே இத்தகைய தவறுகள் நடப்பது, உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஒருசார்பாக அமையும் என்று அனைத்துக் கட்சிகளாலும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இதைக் கவனித்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் எந்தவொரு அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்தும், மக்கள் பிரச்னைகளுக்கு நடவடிக்கை கோரியும் ஜனவரி 29-இல் தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அவர்களுக்கான அங்கீகாரம் வாக்குச்சீட்டில் தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க முடியாது. மக்களுக்கு உழைக்கக் கூடிய, ஊழல் இல்லாத கட்சிகளைத் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com