தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு நாள் கல்விக் கண்காட்சி: இன்று தொடக்கம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், வி. ஐ.டி. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம், அமெட் கல்வி நிறுவனம், கார்னர்ஸ்டோன் இன்டர்நேஷனல் இணைந்து நடத்தும் இரண்டு நாள்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், வி. ஐ.டி. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம், அமெட் கல்வி நிறுவனம், கார்னர்ஸ்டோன் இன்டர்நேஷனல் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கல்விக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனிக்கிழமை (ஜன. 20) தொடங்க உள்ளது.
50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு: இந்தக் கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கடல்சார் உயிரியல், கட்டடக் கலை, தகவல் தொழில், கலை, அறிவியல், வெளிநாட்டுக் கல்வி, ஐ.ஏ.ஏஸ் பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி, நிர்வாக மேலாண்மை பயிற்சி நிறுவனங்கள் என 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
நீட் மாதிரித் தேர்வு:- இந்தக் கல்விக் கண்காட்சின் சிறப்பு அம்சமாக நீட் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது. முன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். இதன் முடிவுகள் 30 நிமிஷங்களில் தெரிவிக்கப்படும். இந்தத் தேர்வு இரண்டு நாள்களும் நடைபெறும்.
உயர் கல்வி ஆலோசனைகள்:- கல்லூரி சேர்க்கைக்கான ஆலோசனைகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், நிபுணர்களின் பொறியியல் கல்விக்கு ஆலோசனைகளும், ஜான் லூயி நடத்தும் 'மாஸ்டர் யுவர் மைண்ட்' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், ஆலோசனைகளையும், சூத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள எளிய வழி முறைகளையும் நிபுணர்கள் விளக்க உள்ளனர்.
இரண்டு நாள்களும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 92824-38120, 97896-67626 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தொடக்க விழா: தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார். அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன், கார்னர்ஸ்டோன் இன்டர்நேஷனல் கல்லூரியின் தலைமை நிதி அலுவலர் ஜாஸ்மின் கிறிஸ்டோபர், ஸ்ரீ சாஸ்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com