ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சுற்றுப்பயணம் தொடக்கம்: ஒரு கோடி தொண்டர்களைச் சேர்க்க இலக்கு

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள அரசியல் கட்சிக்கு தமிழகம் முழுவதும் ஒரு கோடி தொண்டர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து ரஜினி மக்கள் மன்றக் குழுவினர் வேலூரில் வெள்ளிக்கிழமை
வேலூர் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி மக்கள் மன்ற அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர். உடன், தலைமை மன்ற நிர்வாகி ராஜுமகாலிங்கம். 
வேலூர் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி மக்கள் மன்ற அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர். உடன், தலைமை மன்ற நிர்வாகி ராஜுமகாலிங்கம். 

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள அரசியல் கட்சிக்கு தமிழகம் முழுவதும் ஒரு கோடி தொண்டர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து ரஜினி மக்கள் மன்றக் குழுவினர் வேலூரில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணத்தைத் தொடங்கினர். 
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். எப்போது சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் எனவும் கூறியுள்ளார். அதற்கு முன்பாக, ரஜினி மன்றத்துக்கு, தொண்டர்களின் பலத்தை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக தனக்கு மிக நெருக்கமான சிலரைக் கொண்டு, ஒரு குழுவை அமைத்துள்ளார். இக் குழுவினர் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களின் பலத்தை அதிகரிக்கவும், நிர்வாகிகள் இல்லாமல் உள்ள ரஜினி மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையொட்டி, தமிழகத்தில் முதன்முறையாக ரஜினி மக்கள் மன்ற அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர் தலைமையில், 10 பேர் கொண்ட குழு, வேலூரிலிருந்து இந்த சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக் குழுவில் தலைமை மன்ற நிர்வாகி ராஜுமகாலிங்கம், மாவட்டத் தலைவர் என்.ரவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப்பயணத்தையொட்டி, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். 
பின்னர், அவர்கள் கூறுகையில், தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ரஜினி மன்றங்கள் முறையான நிர்வாகிகள் இல்லாமல் உள்ளன. அந்த ரஜினி மன்றங்களுக்கு புதிய நிர்வாகிகளை இந்தக் குழு நியமனம் செய்யும். அந்த நிர்வாகிகள் மூலம் ரஜினி மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றியம், வார்டு, தொகுதி வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். அதில், மொத்த வாக்காளர்களில் 20 சதவீத அளவுக்கு உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு, அரசியல் கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட உள்ளது. வார்டு, ஒன்றியம், தொகுதி, மாவட்ட அளவிலும் இந்த பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை ரஜினி மன்றத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து, தொகுதிக்கு 40 ஆயிரம் வீதம், 5 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com