விளையாட்டு வீரர்களுக்கு ரொக்கப் பரிசு: முதல்வர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசுகளை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற, தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி வாகை சூடிய அணியினர். 
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற, தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி வாகை சூடிய அணியினர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசுகளை வழங்கினார்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு குவாஹாட்டி, ஷில்லாங்கில் நடைபெற்ற 12 -ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1.92 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும், வீரர்களின் பயிற்றுநர்கள் 21 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.28.80 லட்சத்துக்கான காசோலைகளையும் முதல்வர் வழங்கினார்.
இதேபோன்று, 2017 -ஆம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரிக்யவிக்கில் நடைபெற்ற மகளிர்க்கான உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு போட்டிகளில் முதலிடம் பெற்ற வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு சிறப்பினமாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். 
மொத்தம் ரூ. 2.25 கோடிக்கான காசோலைகளை 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 21 பயிற்றுநர்களுக்கு அவர் வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com