எனக்குத் தோன்றியது அவர்களுக்குத் தோன்றவில்லை: யாரைச் சொல்கிறார் பாரதிராஜா? 

அரசியல் வேண்டாம் என்று எனக்கு மனதினில் தோன்றியது; ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் அது தோன்றவில்லை என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.   
எனக்குத் தோன்றியது அவர்களுக்குத் தோன்றவில்லை: யாரைச் சொல்கிறார் பாரதிராஜா? 

புதுச்சேரி: அரசியல் வேண்டாம் என்று எனக்கு மனதினில் தோன்றியது; ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் அது தோன்றவில்லை என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.   

தனிப்பட்ட பயணமாக இயக்குனர் பாரதிராஜா செவ்வாயன்று புதுச்சேரி சென்றிருந்தார். அங்கு மாநில முதல்வர் நாராயணசாமியை அவர் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்பொழுது அரசியலில் பிரவேசம் செய்ய உள்ளதாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அறிவித்துள்ளது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு தாராளமாக வரலாம். அது அவர்களது உரிமை. முதலில் அவர்கள் அரசியலுக்கு வரட்டும்.

இப்பொழுது எனக்கு அரசியலுக்குள் நுழையாமலே அரசியலுக்கு வரவேண்டாம் என்று உள்ளுணர்வில் தோன்றி விட்டது. ஆனால் அது அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அது அவர்களுக்கு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதாகத் தோன்றியுள்ளது. அதனால்தான் அவர்கள் வருகிறார்கள்.

முதலில் அவர்கள் அரசியல் கட்சியினைத் துவங்கட்டும்.தங்களது கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன்பிறகு எனக்கு எது பிடித்திருக்கிறது என்பதை நான் கூறுகிறேன்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com