உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 புதுவை மாநிலம், திருக்கனுôர் அருகே சோம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள முல்லை, கோழிக்கொண்டை பூந்தோட்டங்களைப் பார்வையிட்டு, சாகுபடி செய்யும் வழிமுறைகள், விற்பனை குறித்து விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
 அப்போது, சோம்பட்டு காலனி மாரியம்மன் கோயில் அருகே உள்ள குட்டையில் கழிவுநீர் கலப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக அந்தப் பகுதி போதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கோயில் குட்டையைப் பார்வையிட்ட அவர், உடனடியாக நபார்டு வங்கி, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
 தொடர்ந்து, முத்துமாரியம்மன் கோயில் திடலில் வேளாண் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள், பொதுமக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கிரண் பேடி பேசியதாவது: பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தக் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளைப் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திருக்கக் கூடாது.
 பொதுமக்களுக்குச் சேவையாற்ற அரசும், அதன் பல்வேறு துறைகளும் உள்ளன. இதை மக்கள் பயன்படுத்திக் கொண்டு, யாருக்கு என்ன தேவையோ அதற்கான பயிற்சி பெற்று, வங்கிக் கடன் மூலம் சுயதொழில் தொடங்க வேண்டும்.
 இந்தக் கிராமத்தை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 15 நாள்களுக்குள் சுத்தமாக மாற்றினால், இந்தியன் வங்கி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 புதுவையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் நடைபெறும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com