சென்னை சுற்றுவட்டச் சாலை: கருத்துக்கேட்பு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை சுற்றுவட்டச் சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை சுற்றுவட்டச் சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையால் மகாபலிபுரம் பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எண்ணூர் துறைமுகம் வரை சிங்கபெருமாள்கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல் காட்டுப்பள்ளி வழியாக சென்னை சுற்றுவட்டச்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 
இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் செந்தில், கோட்டாட்சியர் முத்துவடிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன், செந்தூர்பாண்டியன், திட்ட அலுவலர்கள் கோபி, வெஸ்லி உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் முன்னிலை வகித்து கருத்துக்களைக் கேட்டு, பதிலளித்தனர்.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை கருத்துகளாக முன்வைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com