மதிமுக முப்பெரும் விழா: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு பெரியார், அண்ணா என்ற தலைப்பில் மதிமுக சார்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு பெரியார், அண்ணா என்ற தலைப்பில் மதிமுக சார்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த ஈரோட்டில் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழாவுடன், எனது பொதுவாழ்வுப் பொன்விழாவினையும் இணைத்து, முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.
இதனையொட்டி,ஹ பெரியார், அண்ணா எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஜூலை 22-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. மாவட்டப் போட்டிகளில் ஒரு கல்லூரிக்கு இருவர் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். கல்லூரி முதல்வரின் ஒப்புதல் கடிதத்துடன் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் தேர்வு செய்யப்படும் மூவருக்கு, முதல் பரிசு ரூ.6,000, இரண்டாம் பரிசு ரூ.4,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் ஏழு மண்டலங்களில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெறும் மண்டலப் போட்டியில் பங்கேற்க வேண்டும். 
மண்டலப் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறுவோருக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 பரிசு வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவோர் மாநிலப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவார்கள். நிறைவாக, சென்னையில் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் பெரியார், அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.50,000 மற்றும் பெரியார் அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.25,000 மற்றும் பெரியார், அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும். 
தகவல் பெற 99436 03331 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com