10 பேர் தொழில் முனைவோரானால் 100 பேருக்கு வேலை அளிக்கலாம்

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 10 பேர் தொழில் முனைவோரானால் அவர்கள் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பார்கள் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின்
10 பேர் தொழில் முனைவோரானால் 100 பேருக்கு வேலை அளிக்கலாம்

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 10 பேர் தொழில் முனைவோரானால் அவர்கள் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பார்கள் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் வெ.இறையன்பு பேசினார்.
அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழில்முனைவு மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. 
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு நிறுவனமான தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 88 அரசுக் கல்லூரிகளில் தொழில்முனைவு விழிப்புணர்வு முகாமின் தொடக்க விழா சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. 
அதில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் வெ.இறையன்பு பேசியது:
தொழில்முனைவு என்பது ஒரு பொறி. இந்த பொறி மனதில் உருவாகிவிட்டால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காவிட்டால் ஏதோ வாழ்வே இருண்டுவிட்டது என்று திகைத்து நிற்க வேண்டாம். வேலையைத் தேடுவோராக இல்லாமல் வேலை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். 
தற்போது படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, அனைவருக்குமே வேலைவாய்ப்பு கிடைத்து விடாது. 
எனவே, படிப்பை முடிக்கும் மாணவர்கள் தொழில்முனைவோர் ஆகி மற்றவர்களுக்கு வேலைகொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 88 அரசுக் கல்லூரிகளில் தொழில்முனைவு விழிப்புணர்வு நடத்த உள்ளோம். 
ஒவ்வொரு முகாமிலும் 100 மாணவர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு முகாமிலும் 10 பேர் தொழில்முனைவோராக மாறினால் அவர்கள் 100 பேருக்கு வேலைகொடுக்க முடியும் என்றார்.
இந்த திட்டத்தை தமிழக அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறையின் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தொடங்கி வைத்துப் பேசியது:-
படித்து முடிக்கும் மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கினால் தங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். 
புதிய தொழில்முனைவோருக்கு ஏராளமான கடனுதவித் திட்டங்கள், மானியங்கள் அரசால் வழங்கப்படுகின்றன. அவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் இயக்குநர் ஷஜீவனா, கல்லூரியின் முதல்வர் ஆர்.பிரபாகரன், வணிகவியல்துறை தலைவர் டி.சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com