சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளம், நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளம், நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 10, 28 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82601) புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 5, 12, 19 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82602) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும். 
சென்னை-எர்ணாகுளம்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 10, 24, செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82633) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 5- ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82632) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை-நாகர்கோவில்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82607) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82608) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com