நெல்லை துப்புரவுத் தொழிலாளியின் மகன் மருத்துவக் கல்விக்கான செலவை அரசு ஏற்கும்'

நீட் தேர்வில் 303 மதிப்பெண்கள் பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளியின் மகனை

நீட் தேர்வில் 303 மதிப்பெண்கள் பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளியின் மகனை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் அழைத்து பாராட்டினார். அவரது மருத்துவப் படிப்புக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
திருநெல்வேலி பழையபேட்டை சமூகரெங்கையன் கட்டளை சர்தார்புரத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பாஸ்கரனின் மகன் சுதாகர். திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று பிளஸ் 2-வில் 1200-க்கு 1,046 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 720-க்கு 303 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு மருத்துவக் கலந்தாய்வில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை மாணவர் சுதாகர் சந்தித்தார். அப்போது அவரைப் பாராட்டி ஆட்சியர் பரிசு வழங்கினார்.
பின்னர், ஆட்சியர் கூறியதாவது: மாணவர் சுதாகரின் மருத்துவப் படிப்புக்கான செலவை தமிழக அரசே ஏற்கும். தமிழக அரசு கல்விக்கு அளித்து வரும் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி மாவட்ட மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com