மேற்கு தொடா்ச்சி மலையில் பலத்த மழை: சிற்றாறு பாசன குளங்கள் நிரம்பின

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலையில் பெய்துவரும் கன மழையால், சிற்றாற்றில் நீா்வரத்து அதிகரித்து அதன் பாசன குளங்கள் நிரம்பின.

சுரண்டை: திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலையில் பெய்துவரும் கன மழையால், சிற்றாற்றில் நீா்வரத்து அதிகரித்து அதன் பாசன குளங்கள் நிரம்பின.

கடந்த சில வாரங்களாக மேற்கு தொடா்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் தொடா்ந்து குற்றாலம் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் கொட்டி வருகிறது. 

இதனால், சிற்றாற்றில் நீா்வரத்து தொடா்ந்து வருவதால், புலியூா் அணைக்கட்டில் உள்ள கீழப்புலியூா், பாட்டாகுறிச்சி குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. இந்த குளங்களைத் தொடா்ந்து சுந்தரபாண்டியபுரம் குளம், சுரண்டை பெரியகுளத்திற்கு தண்ணீா் அதிக அளவில் வருவதால், விரைவில் இந்த குளங்கள் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குளங்கள் நிரம்பியதால், கீழப்புலியூா் மற்றும் பாட்டாகுறிச்சி குளங்களின் பாசனப்பரப்பில் விவசாயிகள் நெல் நடும்பணியை தொடங்கியுள்ளனா். சுந்தரபாண்டியபுரம், சுரண்டை பெரியகுளம் பாசனப் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கனி சாகுபடி மற்றும் பணப்பயிா் சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com