லோக் ஆயுக்த சட்டத்தை வலிமையானதாக மாற்ற வேண்டும்

லோக் ஆயுக்த சட்டத்தை வலிமையானதாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்த சட்டத்தை வலிமையானதாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக லோக் ஆயுக்த சட்டத்தை தமிழக அரசு அவசர, அவசரமாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்தச் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் வலிமை பெற்றதாக இல்லை. எனவே, அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்கும் விதத்தில், இந்தச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து வலிமையானதாக தமிழக அரசு மாற்ற வேண்டும்.
இந்த அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவருடன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஊழல் ஒழிப்புப் பணியில் அனுபவம் வாய்ந்த ஒருவரையும் நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 
இந்த அமைப்பின் அதிகாரத்தின்கீழ் முதல்வர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரையும் கொண்டுவர வேண்டும். ஒப்பந்தப் பணிகள், பணி நியமனங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இந்த விசாரணையின்கீழ் கொண்டு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com