ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது நன்மை தரும்: நடிகர் ரஜினிகாந்த்

காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் என்னுடைய ஆசை என்று நடிகர் ரஜினிகாந்த், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது நன்மை தரும்: நடிகர் ரஜினிகாந்த்

காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் என்னுடைய ஆசை என்று நடிகர் ரஜினிகாந்த், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:

காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் என்னுடைய ஆசை. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி என்பதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இங்கு இன்னும் கல்வி வளர்ச்சி தேவை. அதை தற்போதைய அரசு செய்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

காந்திய மற்றும் காமராஜர் கொள்கையை தத்துவக் கொள்கையை உடையவர் தமிழருவி மணியன். அவர் அரசியலில் என்னுடன் இணைய நினைத்தால் மகிழ்ச்சிதான். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நினைப்பும், உழைப்பும் இருந்தால் நிச்சயம் நன்மை நடைபெறும்.

தமிழகத்தில் ஊழல் இருக்கிறது என்பது அமித் ஷா கருத்து, அதுகுறித்த விளக்கத்தை அவர் தான் அளிக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது. இதனால் நேரம், பணம் உள்ளிட்டவை சேமிக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் ஒரே மாதிரியான கருத்து இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனென்றால் அதற்கு நேரம் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை. 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவானால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும். இதற்கான இழப்பீடுகளை அரசு முழுமையாக தர வேண்டும். இதில் விவசாயம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்திவாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும். எதற்கெடுத்தாலும் விமர்சிப்பது மிகச் சுலபம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com