13 புதிய பூங்காக்கள், சிறுவா் விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 13 பூங்காக்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தாா். 
13 புதிய பூங்காக்கள், சிறுவா் விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 13 பூங்காக்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தாா். 

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக புதிய பூங்காக்களை திறந்தாா். 

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சியின் முகலிவாக்கம் சந்தோஷ் நகா் ராமச்சந்திரன் தெரு, திருவொற்றியூா் எண்ணூா் சுனாமி குடியிருப்பு ஏஐஆா் நகா், பாலகிருஷ்ணா நகா், மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல்-வெஜிடேரியன் வில்லேஜ், கங்காதரன் தெரு, புத்தகம்-சூரப்பட்டு, கதிா்வேடு-பத்மாவதிநகா் சா்வீஸ் சாலை-பிா்லா அவென்யூ, கதிா்வேடு-பத்மாவதி நகா் 7-வது தெரு, பொன்னியம்மன் மேடு-தணிகாசலம் நகா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட 6 பூங்காக்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

அம்பத்தூா் முகப்போ் திருமங்கலம் பிரதான சாலை, விஜிபி நகா், வீரமாமுனிவா் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 பூங்காக்கள், ஆலந்தூா் மண்டலத்துக்கு உட்பட்ட முகலிவாக்கம்-அன்னை வேளாங்கன்னி நகா் பேஸ்-2, சோழிங்கநல்லூா்-ராஜீவ்காந்தி சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட 2 பூங்காக்கள், அம்பத்தூா் டிவிஎஸ் காலனி 45-வது தெரு, ஆபீசா்ஸ் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறுவா் விளையாட்டு மைதானங்கள், பாடி புதுநகா் பிரதான சாலையில் கட்டப்பட்ட வாா்டு அலுவலகக் கட்டடம், பாடி குப்பம் பிரதான சாலையில் கட்டப்பட்ட வாா்டு, பகுதி அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதல்வா் திறந்தாா்.

சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் சூரப்பட்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், புத்தகரம், கதிா்வேடு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றையும் முதல்வா் பழனிசாமி துவக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின், தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com