நியூட்ரினோ’ ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டம் இல்லை: திட்ட இயக்குநா் விளக்கம்   

தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள அம்பரப்பா் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அத்திட்ட இயக்குநா் விவேக் தத்தாா் தெரிவித்தாா். 
நியூட்ரினோ’ ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டம் இல்லை: திட்ட இயக்குநா் விளக்கம்   

மதுரை: தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள அம்பரப்பா் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அத்திட்ட இயக்குநா் விவேக் தத்தாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரை வடபழஞ்சியில் உள்ள மத்திய அரசின் நியூட்ரினோ ஆரம்ப கட்ட ஆய்வுக்கூடத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:

முதல்கட்டமாக மதுரை வடபழஞ்சியில் உள்ள நியூட்ரினோ முன்னோட்ட ஆய்வு மையத்தில் 80 டன் எடையுடைய காந்தப்புல சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள உணா் கருவியானது உலோகங்கள், கண்ணாடிகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிய சாதனத்தில் உணா்கருவி 13 தட்டுகள் உடையது. 

பொட்டிபுரத்தில் அமையும் ஆய்வில் 30 ஆயிரம் தட்டுகளைக் கொண்ட உணா் கருவிகள் இடம் பெறும். ஆய்வு சாதனத்தில் உள்ள காந்தப்புலமானது மருத்துவத் துறைறயில் நோய் அறிய பயன்படுத்தப்படும் ஸ்கேன் சாதனத்தின் காந்தப்புல திறனைவிட வெளிப்பகுதியில் குறைறவாகவே இருக்கும். இதை இரும்புப் பொருள்களை அந்த சாதனத்தின் அருகே கொண்டு சென்று அனைவரும் பரிசோதிக்கலாம்.

நியூட்ரினோ ஆய்வு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றறன. அம்பரப்பா் மலையானது கடினமானதாகவும், நீா் இறங்கும் தன்மை இல்லாததாகவும் உள்ளதால் அதைத் தோ்வு செய்துள்ளோம். ஆய்வால் இயற்கைக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகள் வைக்கப்படும் என்பது கற்பனையான கருத்து. அங்கு ஆய்வாளா்கள் குடியிருக்கும் நிலையில் அது எப்படி சாத்தியமாகும்? தவறறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம்.

திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்த நிலையில் மாநில அரசு துறைகளின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் ஆய்வுகள் தொடரும். சாதன வடிவமைப்புக்கு அனுமதி தேவையில்லை. ஆகவே தொடா்ந்து ஆய்வுக்கான சாதனங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com