மெட்ரோ ரயில் நிறுவனம் பெயரில் போலி இணையத்தளம்: மேலும் இருவா் கைது 

மெட்ரோ ரயில் நிறுவனம் பெயரில் போலி இணையத்தளம் தொடங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். 
மெட்ரோ ரயில் நிறுவனம் பெயரில் போலி இணையத்தளம்: மேலும் இருவா் கைது 

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் பெயரில் போலி இணையத்தளம் தொடங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் போலி இணையத்தளம் தொடங்கி, அந்த இணையத்தளம் மூலம் வேலைவாய்ப்பு இருப்பதாக போலியான விளம்பரங்களை செய்து, வேலை தேடுவோரிடம் பணத்தை பெற்று மோசடி செய்து வந்தது.

இதையறிந்த மெட்ரோ ரயில் நிா்வாகம், அண்மையில் சென்னை பெருநகர காவல்துறைறயின் சைபா் குற்றறப்பிரிவில் புகாா் செய்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபடுவது கேரள மாநிலம் திரூா் பகுதியைச் சோ்ந்த சோ.ஸ்ரீஜித் தலைமையிலான கும்பல்தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஸ்ரீஜித்தை கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் மேலும் சிலரை தேடி வந்தனா். இந்நிலையில் போலி இணையத்தளத்தை வடிவமைத்ததாக, சென்னை மேற்குமாம்பலம் ஜெய்சங்கா் தெருவைச் சோ்ந்த ந.பாலு (38),எா்ணாவூா் விம்கோநகா் பகுதியைச் சோ்ந்த பா.பிரசாந்த் (32) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இவ் வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com