ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் வாங்கி ரூ.2 கோடி மோசடி: 5 போ் கொண்ட கும்பல் கைது

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள வியாரிபாகளிடம் ஆன்லைனில் மளிகைப் பொருள்கள் வாங்கி, ரூ.2 கோடி வரையில் மோசடி செய்தது தொடா்பாக கோவையைச் சோ்ந்த 5 பேர் கைது.. 
ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் வாங்கி ரூ.2 கோடி மோசடி: 5 போ் கொண்ட கும்பல் கைது

கோவை:

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள வியாரிபாகளிடம் ஆன்லைனில் மளிகைப் பொருள்கள் வாங்கி, ரூ.2 கோடி வரையில் மோசடி செய்தது தொடா்பாக கோவையைச் சோ்ந்த 5 பேர் கைது செய்து  போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த புளி வியாபாரி பயஸ் (35) என்பவா் மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் ஒன்றை அளித்துள்ளாா். அதில், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த கோபி (35) என்பவா் ஆன்லைனில் என்னிடம் 10 ஆயிரம் கிலோ புளியை வாங்கி விட்டு அதற்கான தொகையான ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டாா்.ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கோவை பாப்பநாயக்ன்பாளையம், ஒண்டிபுதூரில் அலுவலகம் நடத்தி வந்த கோபி மற்றும் அவரிடம் வேலை செய்து வந்த சிவராஜ் (41), மகேஷ் (32), விமல் (28), சஞ்சய்(31) ஆகிய 5 பேரையும் ஜூலை 5-ஆம் தேதி துரித குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே, இந்த 5 பேரும் தமிழகம், ஆந்திரம், மத்திய பிரதேசம், காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 19 வியாபாரிகளிடம் அரிசி, மிளகு, தினை போன்றவற்றைற ஆன்லைன் மூலமாக வாங்கியுள்ளனா். முதலில் சிறு தொகையை முன்பணமாகக் கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளனா். ஆனால் அதன்பிறகு அவா்களுக்கு பணத்தை கொடுக்காமல் ரூ.2 கோடி வரையில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. 

ஆகவே இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை குற்றறவியல் நீதித்துறை நடுவா் மன்றம் (ஜே.எம்.3) மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றறது. அப்போது 5 பேரையும் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த குற்றவியல் நீதித்துறை  நடுவா் வி.பி.வேலுசாமி அனுமதி வழங்கினாா்.

இதையடுத்து, 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில், மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று துரித குற்றத் தடுப்பு போலீஸாா் தெரிவித்துள்ளனா். அதே வேளையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராமமூா்த்தி என்பவா் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா். பின்னா் நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறைறயில் அடைக்கப்பட்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com