இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 
இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழகத்தில் இதுவரை பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் மத்திய அரசு இந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வைப் பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு தமிழக அரசு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஏற்கெனவே எதிர்ப்பு: தமிழக அரசின் கொள்கைரீதியான எதிர்ப்பையும் மீறி, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006 -இன் பிரிவுகளுக்கு முரணாக, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்த முடியாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு 
தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை: இப்போதுள்ள இந்திய முறை மருத்துவ மத்திய குழு சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. 
இதனைக் கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையி
லேயே இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் எனமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், 
சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com