ஒகேனக்கல் அருவிக்குச் செல்லவே சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: போலீஸ் குவிப்பு

ஒகேனக்கல் பகுதியில் அருவியையே மூழ்கடித்துக் கொண்டு காவிரி கரைபுரண்டு ஓடுவதால், அருவிப் பகுதிக்குச் செல்லவே சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிக்குச் செல்லவே சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: போலீஸ் குவிப்பு


ஒகேனக்கல் பகுதியில் அருவியையே மூழ்கடித்துக் கொண்டு காவிரி கரைபுரண்டு ஓடுவதால், அருவிப் பகுதிக்குச் செல்லவே சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் பகுதியில் காவிரியாற்றில் வினாடிக்கு தற்போது 1.10 லட்சம் கன அடி நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் செல்லவே அனுமதி மறுக்கப்படுகிறது. அப்பகுதியில் வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சிப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளை, தடுத்து நிறுத்துவது மிகக் கடினமானப் பணியாக அமைந்துள்ளது.

தனியார் விடுதிகளும், சுற்றுலாப் பயணிகளை தங்க அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ஒகேனக்கல்லில் 1.78 லட்சம் அளவுக்கு தண்ணீர் கொட்டியிருக்கிறது. எனினும் இந்த அண்டு காவிரியில் வெள்ளம் அந்த அளவுக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com