ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? நீதிமன்றம் கேள்வி

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 3 மாதங்களாகியும் விசாரணை நடத்தாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? நீதிமன்றம் கேள்வி


சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 3 மாதங்களாகியும் விசாரணை நடத்தாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனைவி மற்றும் மகன்கள் பெயரில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக அமைப்புச் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்எஸ் பாரதி  கொடுத்த புகாரை 3 மாதங்களாக விசாரிக்காதது ஏன்? என்று மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? என்றும், சேகர்ரெட்டி டைரியில் ஓபிஎஸ் பெயர் உள்ளதால், வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை வரும் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com