நீட்' கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ மேல்முறையீடு

நீட்' தேர்வில் மொழிமாற்றப் பிழை காரணமாக, தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய இடைநிலைக்
நீட்' கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ மேல்முறையீடு

நீட்' தேர்வில் மொழிமாற்றப் பிழை காரணமாக, தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட்' தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. அதில், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் என தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கவும், புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்தவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட்' தேர்வை தமிழில் சுமார் 24 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நீட்' தேர்வை நடத்திய சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டதால், இந்த வழக்கு தொடர்பாக டி.கே. ரங்கராஜன் எம்பி சார்பில் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீட்' மூலம் எம்பிபிஎஸ் இடத்திற்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவர் சத்யா என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கலந்தாய்வில் பங்கேற்று எம்பிபிஎஸ் இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) பிரிவின் செயலரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக கருதி விசாரிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com