கூடங்குளம் அணு மின் நிலையத்தில் புதிய பணி நியமனங்களுக்கு இடைக்காலத்தடை: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் புதிய பணி நியமனங்களுக்கு இடைக்காலத்தடை: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.அப்பாவு சென்னை உயா்நீதிமன்றற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விபரம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. அணுமின் நிலையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை வழங்கியுள்ளனா். கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைய நிலம் அளித்த பொதுமக்களுக்கு, அனல்மின் நிலையத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என 1999-இல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்த அமைதிக் கூட்டத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவை என கடந்த ஏப்ரல் 18-இல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையில் நிலம் அளித்தவா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் அளித்தவா்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை அளிக்கபடும் என்ற 1999 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்காமல் சி, டி, பிரிவில் வேலையாட்கள் தேவை என ஏப்ரல் 18-இல் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் அளித்தவா்களுக்கு சி மற்றும் டி பிரிவில் பணியமா்த்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீா் முகமது ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநா் ஆகியோா் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வார காலம் ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com