மீன்வள அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை: ஒரே நாளில் அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளின் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளின் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
3 பட்டப் படிப்புகள்: தமிழகத்தில் உள்ள மீன்வளக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை உயிரித் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
141 இடங்களும் நிரம்பின: இந்தப் படிப்புகளில் 2018-19 -ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை சென்னை வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வள முதுநிலை பட்டப் படிப்பு நிறுவனத்தில் புதன்கிழமை தொடங்கியது. 
முதல்கட்டமாக இளநிலை மீன்வள அறிவியல் பட்டபடிப்பு சேர்க்கை நடைபெற்றது. இதில், ஒரே நாளில் இந்தப் படிப்புக்கு உள்ள 141 இடங்களும் நிரம்பின.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ள 60 இடங்கள், பொன்னேரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ள 60 இடங்கள் மற்றும் தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ள 30 இடங்கள் என மொத்தம் 141 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் அனைத்து இடங்களும் நிரம்பின. இக்கலந்தாய்வில் 435 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
மீன்வளத் துறை அமைச்சரும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான டி.ஜெயக்குமார் கலந்தாய்வை தொடங்கி வைத்து, தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.
இன்று மீன்வள பொறியியல் படிப்புக்கு: இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் பனகுடியில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் வழங்கப்படும் மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புகளில் இடம்பெற்றிருக்கும் 30 இடங்களிலும், சென்னை வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு நிறுவனத்தில் வழங்கப்படும் இளநிலை உயிரித் தொழில்நுட்பப் படிப்பில் இடம்பெற்றுள்ள 40 இடங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com