நாளமில்லாச் சுரப்பிகள் புற்றுநோயைக் கண்டறியும் கருவி அறிமுகம்

நாளமில்லாச் சுரப்பிகள் புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறியும் புதிய ஸ்கேன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாளமில்லாச் சுரப்பிகள் புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறியும் புதிய ஸ்கேன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேலியம் ஜி 68' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் கதிரியக்க பரிசோதனையின் மூலம் நாளமில்லாச் சுரப்பிகளில் உருவாகியுள்ள புற்றுநோய்க் கட்டியை புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் துல்லியமாகவும் வேகமாகவும் கண்டறிந்து எளிதில் அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற முடியும்.
அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், டாக்டர் பிரதாப் சி.ரெட்டி பேசியது: நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கட்டிகள் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. ஆனால், பல பகுதிகளுக்கு பரவக் கூடியது. இவை முதலில் வயிறு, கணையம், குடல் நுரையீரல் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான உறுப்புகளை அதிகம் தாக்கக் கூடியது. இதன் தன்மையைக் கண்டறிவது மிகவும் கடினம். இதுபோன்ற நவீன கருவிகளின் மூலம் புற்றுநோய்க் கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.
புற்றுநோய் அல்லாத பிற நரம்பியல், இதயநோய், நோய்த்தொற்று உள்ளிட்டவற்றையும் இதில் பரிசோதிக்க முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com