மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது அமமுக: தொகுதிவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தொடங்கியுள்ளது. மண்டலம் மற்றும்
மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது அமமுக: தொகுதிவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தொடங்கியுள்ளது. மண்டலம் மற்றும் தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளும் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் சுமார் மூன்று முதல் நான்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:-
வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய தொகுதிகளுக்கு கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.பழனியப்பன், அமைப்புச் செயலாளர்கள் எஸ்.கே.செல்வம், வி.சுகுமார் பாபு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கு அவைத் தலைவர் எஸ்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், என்.ஜி.பார்த்திபன் ஆகியோரும், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகிய தொகுதிகளுக்கு அமைப்புச் செயலாளர்கள் வி.செந்தில்பாலாஜி, சேலஞ்சர் துரை ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ.-க்கள் எம்.ரங்கசாமி, வி.டி.கலைச்செல்வன், அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம் ஆகியோரும், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம் தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ.-க்கள் தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளுக்கு அமைப்புச் செயலாளர்கள் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, ஆர்.பி.ஆதித்தன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி பொறுப்பாளர்கள்: மண்டல பொறுப்பாளர்களைத் தவிர்த்து, தொகுதிவாரியாகவும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சியின் நிர்வாகிகள் தலா 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக நிலைப்பாடு: அதிமுகவைப் பொருத்தவரையில் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளே இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. இந்தப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் கட்சி விதிப்படி ஓராண்டுக்குள் இரண்டு செயற்குழு மற்றும் ஒரு பொதுக் குழு கூட்டங்களை கூட்ட வேண்டும். அந்த வகையில், ஒரு செயற்குழுக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும். இந்த கூட்டத்துக்கு முன்பாக உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சி சார்பில் உயர்நிலைக் குழுவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி இந்தக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவே மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த பரிந்துரைகளை கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கும். இந்தப் பரிந்துரைப்படி கட்சித் தலைமை முடிவெடுக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com