விரைவில் புதிய ரூ.100 நோட்டு

கத்தரிப்பூ (லெவண்டர்) வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
விரைவில் புதிய ரூ.100 நோட்டு

கத்தரிப்பூ (லெவண்டர்) வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
கத்தரிப்பூ நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. இப்புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தாலும் பழைய 100 ரூபாய் நோட்டுகளும் எப்போதும்போல் செல்லுபடியாகும்.
தற்போதுள்ள 100 ரூபாய் நோட்டுகளின் அளவுடன் ஒப்பிடும்போது புதிய நோட்டுகளின் அளவு என்பது சிறியதாகவே இருக்கும். 
ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் குஜராத் சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ள பாரம்பரிய சின்னமான ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம்பெற்றிருக்கும்.
இப்புதிய 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை வங்கிகள் மூலமாக படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.500, ரூ.10, ரூ.10 நோட்டுகளைத் தொடர்ந்து தற்போது புதிய வடிவில் ரூ.100 நோட்டையும் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர்மதிப்பு கரன்ஸிகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.200, ரூ.2,000 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com