108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஊழியர்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஊழியர்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. என்ற தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், 930 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இதன் ஊழியர்கள் சனிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 
இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இவற்றைக் கண்டித்தும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். நோயாளிகளின் நலன் கருதி, அவசரத் தேவையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவர்' எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்தப் போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com