சைவமும் வைணவமும் ஒருங்கே பெற்ற திருக்கோவிலூர்: கிருஷ்ணன் சுவாமிகள்

சைவமும், வைணவமும் ஒருங்கே பெற்றதுதான் திருக்கோவிலூர் என, திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கபிலர் விழாவில் கிருஷ்ணன் சுவாமிகள் தெரிவித்தார்.
சைவமும் வைணவமும் ஒருங்கே பெற்ற திருக்கோவிலூர்: கிருஷ்ணன் சுவாமிகள்

சைவமும், வைணவமும் ஒருங்கே பெற்றதுதான் திருக்கோவிலூர் என, திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கபிலர் விழாவில் கிருஷ்ணன் சுவாமிகள் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் 43-ஆவது ஆண்டு கபிலர் விழா வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடுடன் தொடங்கியது.
பின்னர், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீசுப்ரமண்ய மஹாலில் நடைபெற்ற கபிலர் விழாவில், திருக்கோவிலூர் ஸ்ரீத்ரி விக்ரம சுவாமி கோயில் ஜீயர் ஸ்ரீஉ.வே. ஸ்ரீனிவாஸ ராமானுஜசாச்சாரியார் சுவாமிகளின் குமாரர் கிருஷ்ணன் சுவாமிகள் ஆசியுரை வழங்கிப் பேசியதாவது:
பெருமாளை ஆழ்வார்கள் நேரடியாகக் கண்டு அனுபவித்து, அது அடங்காமல் பிரகாசமாக வெளிப்பட்டது தான் திவ்ய பிரபந்தம். அதேபோல, சிவபெருமானை நாயன்மார்கள் கண்டு அனுபவித்து அருளியதுதான் திருமுறை. இவ்விரண்டும் நமக்கு கிடைத்தப் பொக்கிஷங்கள். இவை மிகுந்த ஒளி சக்தியுடன் இருப்பதை அறியலாம். இதை வைணவ, சைவ ஆச்சாரியார்கள் பல நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அவர்களுக்குப் பிறகு பல அடியார்கள் தோன்றி பகவானைப் பாடியபோதிலும், அவையெல்லாம் முக்கிய இடத்தைப் பெறவில்லை. காரணம், ஆழ்வார்களும், நாயன்மார்களும் கடவுளை நேரில் கண்டு மனம் உருகிப் பாடியதால்தான்.
அப்படிப்பட்ட சைவமும், வைணவமும் ஒருங்கே பெற்ற திருக்கோவிலூரில் சங்கப் புலவர் கபிலருக்கு விழா எடுக்கும் தமிழ்ச் சான்றோருக்கு வாழ்த்துகள் என்றார் அவர்.
3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்வுகளாக காலை 9 மணிக்கு மங்கல இசை, காலை 10 மணிக்கு திருமுறை, காலை 11 மணிக்கு விஜயலட்சுமி இராமசாமி தலைமையில், திருமுறைகள் ஒன்பது பதினொன்று' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மகேஸ்வரி சற்குரு, பாலசீநிவாசன் ஆகியோர் பேசினர்.
மாலை 5.30 மணிக்கு திருமுறை இன்னிசையரங்கம் நடைபெற்றது. இரவில் எஸ்.அஞ்சனி ஸ்ரீநிவாசன், எஸ்.அஸ்வினி ஸ்ரீநிவாசன், வி.சுரேஷ் ஆகியோர் பங்குபெற்ற வாத்திய விருந்து நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில், மணம்பூண்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அதிகளவில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பண்பாட்டுக் கழகச் செயலர் தேவ.ஆசைத்தம்பி வரவேற்றார். நிறைவாக, பண்பாட்டுக் கழக துணைத் தலைவர் தே.முருகன் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராஜன், செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், பொதுச் செயலர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
விழாவில் இன்று...
விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு, காலை 9 மணிக்கு மங்கல இசை, காலை 10 மணிக்கு திருமுறை, காலை 11.30 மணிக்கு கவிராயர் மலர்மகன் தலைமையில் கவியரங்கம், மாலை 5 மணிக்கு கபிலர் குன்றின் அருகில் கீழையூரில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்திலிருந்து, கபிலர் விருது பெறும் அறிஞரை ஊர்வலமாக அழைத்து வருதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து, முன்னிரவு பரிசு நிலா, பாராட்டு நிலா, இரவு விருது நிலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தினமணி ஆசிரியர் பாராட்டுரை: இதைத் தொடர்ந்து, நீதியரசர் ஆர்.மகாதேவன் தலைமையில், கபிலவாணர் விருது பெறும் கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகளைப் பாராட்டி தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசவுள்ளார். இதையடுத்து முனைவர் சோ.சத்தியசீலன் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் இன்னிசை நிலா, வாத்திய விருந்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com