நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் இணையதளம் மூலமாக செயல்படும் இந்த சேவையின் மூலம் அளவற்ற ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிஎஸ்என்எல் வேலூர் மண்டல பொது மேலாளர் வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு இணையாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்தொடர்ச்சியாக, நாட்டிலேயே முதல்முறையாக சிம்கார்டு இல்லாமல் விங்ஸ்' எனப்படும் செயலி மூலம் செல்லிடப்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இணையதளம் வழியாகச் செயல்படும் இந்த செயலியை ஆண்டு பதிவுக் கட்டணம் ரூ. 1,099 செலுத்தி தங்களது செல்லிடப்பேசி, டேப்லெட், லேப்டாப், ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலி வழியாக அளவற்ற ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 
இந்த சேவைக்கு சிம்கார்டு அவசியம் இல்லை. எந்தவொரு நெட்வொர்க், வைஃபை வழியாகவும் பேசலாம். வெளிநாடுகளுக்கும் பேசலாம். அதற்கு வைப்புத் தொகை ரூ. 2,000 செலுத்த வேண்டும். இந்த சேவையை பெறுவதற்கு www.sancharaadhaar.bsnl.co.in/ Wings/Login.do என்ற இணையதள முகவரி வழியாக முன்பதிவு செய்யலாம். இந்த சேவை தமிழகம் முழுவதும் ஜூலை 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல், புதிய பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ. 99-க்கு ரீசார்ஜ் செய்தால் 45 ஜி.பி. உபயோகப்படுத்தலாம். ரூ. 199 செலுத்தினால் 150 ஜி.பி. ரூ. 491 செலுத்தினால் 600 ஜி.பி. உபயோகப்படுத்தலாம். 
ஏற்கெனவே, லேண்ட்லைன் இணைப்பு உபயோகிப்பவர்களுக்கு மற்றொரு இலவச லேண்ட்லைன் இணைப்பு வழங்கப்படும். 2-ஆவது இணைப்பில் 200 அழைப்புகளுக்கு 25 சதவீதம் இலவசமாக வழங்கப்படும். 
மேலும், தற்போது தொலைபேசி மாதாந்திர ரசீதுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாத ரசீதிலும் ரூ. 10 கட்டணச் சலுகை அளிக்கப்படும். இதற்கான ஒப்புதலை ஸ்ரீஹர்ஸ்ரீர்ம்ல்.ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com