ஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கழிவுகள் 5 நாள்களில் முற்றிலும் வெளியேற்றப்படும்'

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் பணி இன்னும் 5 நாள்களில் முடிவடையும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் பணி இன்னும் 5 நாள்களில் முடிவடையும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட உயர்நிலை வல்லுநர்கள் குழு, ஆலையில் உள்ள ரசாயனக் கழிவுகளை அகற்ற பரிந்துரை செய்தது. அதன்படி, மாவட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 20 நாள்களாக பல்வேறு அமிலங்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 7 ஆயிரம் மெட்ரிக் டன் கந்தக அமிலமும், 25 ஆயிரம் டன் ஜிப்சமும், 600 மெட்ரிக் டன் பாஸ்பாரிக் அமிலமும், 8 ஆயிரம் மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட்டும், 60 மெட்ரிக் டன் சிலிசிக் அமிலமும் வெளியேற்றப்பட்டுள்ளன.
இதுவரை ஏறத்தாழ 80 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இன்னும் 5 நாள்களில் ரசாயன கழிவுகளை அகற்றும் பணி முழுமையாக நிறைவு பெறும். ஜிப்சம் அதிக அளவில் இருப்பு இருப்பதால், அதை வெளியேற்ற கூடுதலாக சில நாள்கள் ஆகலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com