ஆம்பூர் காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் ?

ஆம்பூர் வனச்சரக எல்லைக்கு உள்பட்ட காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆம்பூர் காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் ?

ஆம்பூர் வனச்சரக எல்லைக்கு உள்பட்ட காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
 ஆம்பூர் வனச்சரகத்தில் காரப்பட்டு, துருகம், ஊட்டல் மலை, பெங்களமூலை, மாச்சம்பட்டு, பாலூர், கெம்பசமுத்திரம், குந்தேலி மூலை, சாரங்கல் காப்புக்காடுகள் உள்ளன. ஆந்திர வனப்பகுதியான கெüண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி தமிழகத்தின் இந்த ஆம்பூர் வனச்சரக காப்புக் காடுகள் அமைந்துள்ளன.
 இந்த காடுகளில் சிறுத்தை, யானை, கழுதைப்புலி, கரடி, செந்நாய், ஓநாய், கடமான்கள், புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, முயல் என பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தக் காப்புக் காடுகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த வனப்பகுதியில் மான்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை வேட்டையாடும் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் ஆடுகள், மாடுகள் மர்மமான முறையில் இறக்கின்றன. சிறுத்தைகள் தான் அவற்றை அடித்து கொன்று தின்று செல்வதாகக் கருதப்படுகிறது.
 ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் உள்ள ஊட்டல் மலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் வனவிலங்கின் சப்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் வனப்பகுதியை ஒட்டி வாழும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 ஊட்டல் மலை அருகே உள்ள நெட்றாம்பண்டை வனப்பகுதியில் பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் கால்நடை மேய்க்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது அங்கு மானின் எலும்புக் கூடு, உடல் பாகங்கள் கிடப்பதைக் கண்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com