இரும்பாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே: ஒப்படைக்க வேண்டும்

இரும்பாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே: ஒப்படைக்க வேண்டும்

சேலம் இரும்பாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை 36 ஆண்டுகளாகப் பயன்படுத்தாததால், அந்த நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.

சேலம் இரும்பாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை 36 ஆண்டுகளாகப் பயன்படுத்தாததால், அந்த நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
 பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜி.கே.மணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
 மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், இன்னும் சில நாள்களில் அணை, அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது.
 ஒவ்வொரு முறையும் அணை நிரம்பும்போது, உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை சேலம் மாவட்டத்துக்கு முறையாகப் பயன்படுத்தி, ஏரிகளை நிரப்ப வேண்டும்.
 சேலம் இரும்பாலை உருவாக்கப்படும்போது 1974-ஆம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அரசு சட்டப்படி கையகப்படுத்தப்படும் நிலம் 36 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
 அதனடிப்படையில், இரும்பாலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபடவும் பா.ம.க. தயாராக உள்ளது. இதேபோல், சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு கையகப்படுத்திய நிலம் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 பசுமைச் சாலைத் திட்டத்துக்காக காவல் துறையைக் கொண்டு அடக்குமுறை செய்வதை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மக்கள் விரும்பாதச் செயலை அரசு ஏன் செய்ய வேண்டும் என்றார்.
 கூட்டத்தில், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள், மாவட்டச் செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், சாம்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com