எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

மேட்டூரில் எச்சரிக்கையை மீறி காவிரியில் குளிக்கச் சென்ற 6 பேர் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 
எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

மேட்டூரில் எச்சரிக்கையை மீறி காவிரியில் குளிக்கச் சென்ற 6 பேர் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.  இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 118 அடியாக உயர்ந்தது. விரைவில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 88.73 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே அணை நிரம்பினால் மொத்த உபரி நீரும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும்.

காவிரி கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்த வேளையில், மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com