கடலில் 5 கி.மீ. தொலைவை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி

இரு கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி இளைஞர் கடலூரில் கடலில் 5 கி.மீ. தொலைவை சனிக்கிழமை நீந்திக் கடந்தார்.
கடலில் 5 கி.மீ. தொலைவை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி

இரு கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி இளைஞர் கடலூரில் கடலில் 5 கி.மீ. தொலைவை சனிக்கிழமை நீந்திக் கடந்தார்.
 இந்திய தேசிய மாணவர் படை யூனிட்-5 சார்பில் 30 மாணவர்கள், 15 மாணவிகள் கொண்ட குழுவினர் கடந்த 10-ஆம் தேதி
 புதுச்சேரியிலிருந்து பெருங்கடல் சாகசப் பயணம் மேற்கொண்டனர். கமாண்டர் தினகரன், துணை நிலை கமாண்டர் சிவசங்கரன் தலைமையிலான இந்தக் குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறைக்கு படகில் சென்று மீண்டும் புதுவையில் தங்களது பயணத்தை சனிக்கிழமை மாலை நிறைவு செய்தனர். இதையொட்டி, இந்தக் குழுவினர் கடலூர் துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தடைந்தனர்.
 சனிக்கிழமை காலையில் பயணம் மேற்கொண்ட குழுவினரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வீரராகவன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் - வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம்ஸ்ரீனிவாஸ் (25). இவர், பிறவியிலேயே கால்கள் செயலிழந்து, மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் இருந்தாராம். இருப்பினும், ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சி பெற்றார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் நிலையைப் பெற்றுள்ளார். தனது உடல் குறைபாடுகளைப் பொருள்படுத்தாமல் நீச்சலில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார்.
 இவர், சனிக்கிழமை சாகசப் பயணம் மேற்கொண்ட வீரர்களுடன் நீச்சலில் பங்கேற்றார். கடலூர் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்கு கடலில் நீந்தி தேவனாம்பட்டினம் கடற்கரையை வந்தடைந்தார். அவரை புதுச்சேரி குழுமத்தின் தலைவர் கருணாநிதி, கர்னல் ஜெயச்சந்திரன், கோயம்புத்தூர் குழுமத்தின் தலைவர் இன்னிங்ஸ் பீட்டர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் என்சிசி அலுவலர்கள் பிரேம்குமார், ஜான் ராபர்ட், வளனார் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com