லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
 ராமதாஸ்: நெடுஞ்சாலைகளுக்கான சுங்கவரி வசூலிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உள்பட இந்தியா முழுவதும் 65 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டிருப்பதால் போராட்டம் முழுமையடைந்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களுக்கு இந்த நிலை நீடித்தால் அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயருவதைத் தடுக்க முடியாது. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து லாரி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
 ஜி.கே.வாசன்: லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வரத்து நின்று போகும். இதனால் பொருள்களின் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படுவதோடு, மேல்தட்டு மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த நிலை நீடிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தையின் மூலம் இதற்குத் தீர்வு காண வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com