லாரிகள் வேலை நிறுத்தம்: காய்கறிகள் விலை உயர்கிறது

இரண்டாம் நாளாகத் தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
லாரிகள் வேலை நிறுத்தம்: காய்கறிகள் விலை உயர்கிறது

இரண்டாம் நாளாகத் தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில், "கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து 350 லாரிகளில் தினமும் 7,000 டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி உள்ளதால், உள் மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏற்கெனவே புறப்பட்ட லாரிகள் கோயம்பேடு சந்தைக்கு சனிக்கிழமை வழக்கம்போல் வந்தன. இனிவரும் நாள்களில் லாரிகளின் வேலைநிறுத்தம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போராட்டம் தீவிரமானால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது என்றார்.
 காய்கறிகளின் மொத்த விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் ரூ.20-25, சாம்பார் வெங்காயம் ரூ.50-55, தக்காளி ரூ.20 - 27, அவரை ரூ. 30-35, கேரட் ரூ.30-40, பீட்ரூட் ரூ. 20-25, நூக்கல் ரூ. 30-35, முள்ளங்கி ரூ. 20-25, கத்திரிக்காய் ரூ.20-30, புடலங்காய் ரூ.25-30, கோவைக்காய் ரூ.20-25, சேனைக்கிழங்கு ரூ. 20-25, உருளைக்கிழங்கு ரூ. 20-25, வெண்டைக்காய் ரூ. 20-30, காலி பிளவர் ரூ. 20-25.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com