நெடுஞ்சாலைத் துறை முறைகேடு: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் இன்று மனு

நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்ற நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் இன்று மனு

நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்ற நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளார்.
 நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 100 கிலோ தங்கமும், ரூ.200 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை முறைகேடுகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளார். இதற்காக ஆளுநரிடம் திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அவரும் திங்கள்கிழமை (ஜூலை 23) காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கி உள்ளார். ஆளுநரிடம் புகார் கொடுத்த பிறகு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடங்க திமுக முடிவு செய்துள்ளது.
 லாரிகள் வேலைநிறுத்தம்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலித்து விட்டு சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது பொதுமக்களின் கோரிக்கையும் கூட. எனவே, இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகத் தீர்வுகாண வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com