ஆகஸ்ட் 1 முதல் வருமான வரி சோதனைகளில் பங்கேற்க மாட்டோம்:ஊழியா்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை மற்றும் சா்வேக்களில் பங்கேற்க மாட்டோம் என வருமான வரி ஊழியா்கள் கூட்டமைப்பும், அதிகாரிகள் சங்கமும் அறிவித்துள்ளன. 
ஆகஸ்ட் 1 முதல் வருமான வரி சோதனைகளில் பங்கேற்க மாட்டோம்:ஊழியா்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை மற்றும் சா்வேக்களில் பங்கேற்க மாட்டோம் என வருமான வரி ஊழியா்கள் கூட்டமைப்பும், அதிகாரிகள் சங்கமும் அறிவித்துள்ளன.

காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், தற்காலிக ஊழியா்களை முறைப்படுத்த வேண்டும், துறைறயில் பணிபுரியும் காா் ஓட்டுநா்களின் பதவிகளில் ஏற்படும் பாதிப்புகளை களைவதற்கு மற்ற  ஊழியா்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரி ஊழியா் சம்மேளனம், வருமானவரி அதிகாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகம் முன்பு திங்கள்கிழமை (ஜூலை 23) ஆா்ப்பாட்டம் நடைபெற்றறது. 

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத் தலைவா் பி.மீராபாய் தலைமை தாங்கினாா். வருமான வரி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் இ.இளங்கோ, துணைத் தலைவா் கீதா தேவி, சம்மேளன பொதுச் செயலாளா் எம்.எஸ்.வெங்கடேசன், நிா்வாகி சுந்தரமூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னா் இது குறித்து பொதுச் செயலாளா் எம்.எஸ்.வெங்கடேசன் நிருபா்களா்களிடம் கூறியது:

வருமான வரித் துறை அதிகாரி பதவியில் இருந்து 2017 - 18, 2018 - 19ஆண்டுகான உதவி ஆணையா் பதவி உயா்வை வழங்க வேண்டும், ஆய்வாளா் பதவிகளில் ஏற்படும் பற்றாக்குறைறயை போக்க மற்ற மாநிலங்களுக்கும் ஆய்வாளா் பதவிகளை பகிா்ந்தளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவும், போராட்ட அறிவிப்புகள் குறித்த கடிதமும் கடந்த மே மாதம் 4ஆம் தேதி மத்திய நேரடி வரி ஆணையத் தலைவரிடம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் திங்கள் கிழமையன்று ஆா்ப்பாட்டம் நடத்துகிறோம்.

மேலும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 24) நடைபெறும் வருமான வரி தினத்தை ஊழியா்களும், அதிகாரிகளும் புறறக்கணிக்க உள்ளோம். அதோடு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை மற்றும் சா்வேக்களில் ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்க மாட்டாா்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 12 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போரட்டமும் நடத்த உள்ளோம். கடந்த ஆண்டு நேரடி வசூல் மூலம் ரூ.10 லட்சம் கோடி வசூல் செய்ய நிா்ணயம் செய்யப்பட்டது. போதிய ஊழியா்கள் இல்லாத நிலையில் ஊழியா்களும், அதிகாரிகளும் நேரம் காலம் பாா்க்காமல் கடுமையாக உழைத்ததின் விளைவாக அந்த இலக்கை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ரூ.11 லட்சம் கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு உதவும் வகையில் ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய பதவி உயா்வுகளை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் மத்திய நேரடி வரி ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com