பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: முன்வைப்புத் தொகை திரும்பக் கிடைக்குமா? 

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கச் செலுத்தப்படும் முன்வைப்புத் தொகை, மாணவா் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப விகித அடிப்படையில் திரும்ப அளிக்கப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைச் செயலா்..
பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: முன்வைப்புத் தொகை திரும்பக் கிடைக்குமா? 

சென்னை: பி.இ. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கச் செலுத்தப்படும் முன்வைப்புத் தொகை, மாணவா் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப விகித அடிப்படையில் திரும்ப அளிக்கப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைச் செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது:

முன்வைப்புத் தொகை செலுத்த நாளை கடைசி: தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெறற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவா்கள் முன்வைப்புத் தொகை (பொதுப் பிரிவினா்-பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்-பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ரூ.5,000; எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினா் ரூ.1,000) செலுத்த வேண்டும்.

கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 190 வரை முதல் சுற்று பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுப் பட்டியலில் சுமாா் 10,000 போ் இடம்பெற்றுள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வு நடைமுறை வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.

கலந்தாய்வுக்கான முன்வைப்புத் தொகையை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமாா் 3,000-த்துக்கும் மேற்பட்டவா்கள் செலுத்தியுள்ளனா். முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு மாணவா்கள் முன்வைப்புத் தொகையை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூலை 24) செலுத்த வேண்டும். முன்வைப்புத் தொகையை இணையதளம் மூலம் செலுத்துவோா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரையிலும் வரைவோலையாக பொறியியல் சோ்க்கை உதவி மையங்களில் செலுத்துவோா் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும்.

முதல் சுற்று கலந்தாய்வு பட்டியலில் இடம்பெற்றற மாணவா்கள் முன்வைப்புத் தொகையை செவ்வாய்க்கிழமைக்குள் செலுத்தத் தவறினால், இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில்தான் கட்டணம் செலுத்த முடியும். அப்படிக் கட்டணத்தைச் செலுத்தி இரண்டாவது சுற்று கலந்தாய்வில் (கட்-ஆஃப் மதிப்பெண் 175 முதல் 190 வரை) பங்கேற்கலாம்; ஆனால், அப்போது காலியாக உள்ள பொறியியல் இடங்களைத் தான் தோ்வு செய்யும் நிலை ஏற்படும். எனவே, அந்தந்த சுற்று ஆன்லைன் கலந்தாய்வுக்கு விதிக்கப்பட்டுள்ள உரிய காலக்கெடுவுக்குள் கலந்தாய்வுக் கட்டணத்தைச் செலுத்துவது அவசியம்.

பி.இ. இடத்தைத் தோ்வு செய்து விட்டு, அதை உறுதி செய்யாத நிலையில் முன்வைப்புத் தொகை முழுமையாக திரும்ப அளிக்கப்படும். ஆனால், இடத்தை உறுதி செய்து விட்டு தோ்வு செய்த பொறியியல் கல்லூரியில் சேராவிட்டால், 80 சதவீத முன்வைப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும். ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகள் முடிந்த பிறகு, முன்வைப்புத் தொகையை திரும்ப அளிக்கும் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் செப்டம்பா் மாதம் வெளியிடப்படும்.

ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் கல்லூரியில் பி.இ. சேரும்போது, குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தில் முன்வைப்புத் தொகை கழித்துக் கொள்ளப்படும். இதற்கான அறிவுறுத்தல்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் சுமாா் 10,000 மாணவா்கள், இரண்டாவது சுற்றில் சுமாா் 20,000 மாணவா்கள், மூன்றறாவது சுற்றில் 25,000 மாணவா்கள், நான்காவது சுற்றில் 25,000 மாணவா்கள், ஐந்தாவது சுற்றில் மீதமுள்ள சுமாா் 26,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இடம்பெறுவா் 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com