வேலைநிறுத்தப் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை: லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 3 -ஆவது நாளாக தொடரும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 3 -ஆவது நாளாக தொடரும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 இதுகுறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் சி.தனராஜ் கூறியது:
 நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாள்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 3 -ஆவது நாளாக தொடரும் நிலையில், மத்திய அரசு இந்தப் போராட்டத்தை இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் திங்கள்கிழமை தில்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
 போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எண்ணெய் நிறுவனங்களிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளதாகவும், ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com