நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான காலநிலை இன்னும் வரவில்லை: தில்லியில் ஓபிஎஸ் பேட்டி 

நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான காலநிலை இன்னும் வரவில்லை என்று தில்லியில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான காலநிலை இன்னும் வரவில்லை: தில்லியில் ஓபிஎஸ் பேட்டி 

புது தில்லி: நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான காலநிலை இன்னும் வரவில்லை என்று தில்லியில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென திங்கள்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர். திங்கள்கிழமை மாலை 5.30 மணி விமானத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லி புறப்பட்டார்.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புகளை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை மாலையே அவர் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான காலநிலை இன்னும் வரவில்லை என்று தில்லியில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கு முன்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

எனது தில்லி பயணமானது அரசியல் தொடர்புடையது அல்ல. இது முழுக்க தனிப்பட்ட ஒன்றாகும். எனது சகோதரர் உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்ட பொழுது, மேல் சிகிச்சைக்காக உடனடியாக சென்னை கொண்டு செல்ல, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவியின் பேரில் ராணுவ 'ஹெலி ஆம்புலன்ஸ்' உதவி கிடைத்தது. இந்த உதவிக்கு நன்றி கூறவே நான் இங்கு வந்துள்ளேன்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் துவங்கிவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான காலநிலை தமிழகத்தில் இன்னும் வரவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி பேசி சரியான முடிவை எடுப்பார்கள்.

மாநிலங்களை துணைத் தலைவர் பதவியை அதிமுகவுக்கு அளிப்பதற்கு பாஜக முன்வந்தால் அப்பொழுது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com