திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு 

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு 

சென்னை:  திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க, புது தில்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் செவ்வாய் மாலை சென்னை வந்த ராகுல் காந்தி, விமான நிலையத்தில் இருந்து நேராக காவேரி மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து, அவரது குடும்பத்தினரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த  ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நலமுடன் உள்ளார்.  தமிழக மக்களைப் போல வலிமையான மன வலிமைக் கொண்டவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் நீண்ட கால நட்பு உள்ளது. அவரது உடல்நிலை குணமடைய சோனியா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் கட்டிலில் கண் திறந்த நிலையில் பாதி சாய்ந்தபடியிருக்கும் கருணாநிதியிடம் ஸ்டாலின் காதில் குனிந்து ஏதோ சொல்வது போன்று காணப்படுகிறது. அதே நேரம் சற்றுத் தொலைவில் ராகுல் நின்று கொண்டிருக்கிறார். அவர்களுடன் தயாநிதிமாறன் காணப்படுகிறார்.

கடந்த முறை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருணாநிதியினை சந்தித்த புகைப்படம் வெளியானது. அப்பொழுது கருணாநிதி ஒருக்களித்த நிலையில் இருந்த புகைப்படம் மட்டுமே வெளியானது. தற்பொழுது கருணாநிதி முழுமையாக பார்வைக்கு தெரியும் வகையிலான இரண்டாவது படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com