ஸ்டெர்லைட் ஆலை விவாதம்: ஸ்டாலின் சவாலுக்கு ஜெயக்குமார் பதிலடி

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஒரு நாள் அல்ல ஒரு ஆண்டு முழுவதும் விவாதிக்க தயாராக இருப்பதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி தந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விவாதம்: ஸ்டாலின் சவாலுக்கு ஜெயக்குமார் பதிலடி

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து, போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சீல் வைத்தது. 

இந்நிலையில், 2010-இல் ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான் இந்த ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கப்பட்டது என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று (வியாழக்கிழமை) பேசினார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க நானும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் தயாராக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஒரு நாள் அல்ல ஒரு ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயாராக இருப்பதாக" என்று பதிலடி தந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com