சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு புதிய நீதிபதிகள் பதவியேற்பு 

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர். 
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு புதிய நீதிபதிகள் பதவியேற்பு 

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர்.  .

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஏழு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கடந்த 1-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவர்களில் நிர்மல் குமார், ஆஷா, சுப்ரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகிய ஐந்து பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் சரவணனை மற்றும் இளந்திரையன் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர்.  .

சென்னை உயர் நீதிமன்ற அரங்கில் திங்கள் காலை எளிமையாக நடைபெற்ற விழாவில் அவர்கள்  அனைவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com