நீதிமன்றம் சொல்லாது..நாம்தான் செய்ய வேண்டும்: காவிரி விவகாரம் குறித்து கமல் 

காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து நீதிமன்றம் சொல்லாது; நாம்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துளார்.
நீதிமன்றம் சொல்லாது..நாம்தான் செய்ய வேண்டும்: காவிரி விவகாரம் குறித்து கமல் 

சென்னை: காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து நீதிமன்றம் சொல்லாது; நாம்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துளார்.

காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்றார். இதையடுத்து திங்கள் காலை அவர் குமாராசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல், 'நான் மக்கள் பிரநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. அதனால் தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.   

கர்நாடகப் பயணம் முடிந்து திங்கள் மாலை சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து நீதிமன்றம் சொல்லாது; நாம்தான் செய்ய வேண்டும். நெடுங்கால சட்டப்போராட்டத்திற்கு தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. அதை சரியாக செயல்படுத்த வேண்டும். அதற்கான சமிக்கைகள் அங்கு தெரிகின்றது. நாம் அதனை எதிரொலிக்க வேண்டும்.

இது நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பிரச்னை. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இது இருந்து வருகிறது.

காவிரி விவகாரத்தில் காலா ஏன் தொடர்பு படுத்தப் படுகின்றது என்றால் கலை எப்பொழுதும் அவர்களுக்கு 'ஈஸி டார்கெட்' .ஆனால் காலா இதனை முறியடித்து நல்ல வருவாய் ஈட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

நீட் முடிவுகளைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்க வேண்டுமென்பதே எனது ஆசை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com