நீட் தேர்வு தற்கொலை: மாணவி பிரதீபாவின் உடல் இன்று அடக்கம்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
நீட் தேர்வு தற்கொலை: மாணவி பிரதீபாவின் உடல் இன்று அடக்கம்

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 2016-17-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் 1,1125 மதிப்பெண்கள் பெற்றார்.

மருத்துவப் படிப்பை பயில விரும்பிய பிரதீபா கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய நீட் தேர்வில் 159 மதிப்பெண்கள் மட்டும் பெற்றதால் தனக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காது என்பதை அவர் உணர்ந்தார். தனியார் கல்லூரிகளில் படிக்கவும் போதிய வசதியில்லாததால் பிரதீபா ஓராண்டு பயிற்சி பெற்று நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வெழுதினார். 

இதில் கடந்த ஆண்டைவிட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மீண்டும் அரசு ஒதுக்கீட்டில் கிடைக்க வாய்ப்பில்லை என்று எண்ணி மனமுடைந்த பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

பிரதீபாவின் மரணத்துக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று கூறி பிரதீபாவின் உறவினர்கள் மனமுடைந்தனர். 

இதையடுத்து, பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அவர்களது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். 

பிரதீபாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால் 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் முன்வைத்தனர். 

அதாவது, உயிரிழந்த பிரதீபா குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும். அவரது குடும்பத்தினர் யாரேனும் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்கும் வரை பிரேத பரிசோதனைக்கு கையெழுத்திட மாட்டோம் என்று பிரதீபாவின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதனால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்  அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பிரதீபாவின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். 

பின்னர், போலீஸாரின் பாதுக்காப்புடன் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து பிரதீபாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்து அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அமுமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதில், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com