நீட் தோ்வில் மதிப்பெண் குறைவு: மாயமான மாணவி பிகாரில் மீட்பு 

நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்ததினால், சென்னை நம்மாழ்வாா்பேட்டையில் மாயமான மாணவி, பிகாரில் மீட்கப்பட்டாா்.
நீட் தோ்வில் மதிப்பெண் குறைவு: மாயமான மாணவி பிகாரில் மீட்பு 

சென்னை:

நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்ததினால், சென்னை நம்மாழ்வாா்பேட்டையில் மாயமான மாணவி, பிகாரில் மீட்கப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை நம்மாழ்வாா்பேட்டை ரெட்டி காலனி சாலைப் பகுதியைச் சோ்ந்த ராமா் மகள் கோடீஸ்வரி (19). இவா் கடந்தாண்டு நீட் தோ்வு எழுதியதில், பல் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைத்தது. ஆனால் கோடீஸ்வரிக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததினால், அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தாா்.

இந்நிலையில் இந்தாண்டு கோடீஸ்வரி மீண்டும் நீட் தோ்வு எழுதினாா். ஆனால் இந்தாண்டு, கோடீஸ்வரிக்கு கடந்தாண்டு கிடைத்ததை விட குறைவான மதிப்பெண்களே கிடைத்தது. இதனால் மிகுந்த மன வேதனையுடனும், மன அழுத்ததுடனும் கோடீஸ்வரி இருந்தாா்.

இதற்கிடையே கோடீஸ்வரி கடந்த 4 ஆம் தேதி திடீரென மாயமானாா். அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் கோடீஸ்வரியை தேடிப் பாா்த்தனா். ஆனால் அவா் எங்கேயும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோடீஸ்வரியை தேடி வந்தனா். இதன் ஒரு பகுதியாக சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதற்கிடையே கோடீஸ்வரி வைத்திருந்த செல்லிடப்பேசி பிகாரில் இருப்பதாக காட்டியதால், அது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் கோடீஸ்வரி செல்லிடப்பேசி சிக்னல் குறித்து சென்னை போலீஸாா், பிகாா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, அங்கு கோடீஸ்வரி இருந்தால் மீட்கும்படி புதன்கிழமை அறிவுறுத்தினா். அதன்படி பிகாா் போலீஸாா், அந்த செல்லிடப்பேசி சிக்னலின்படி அங்குள்ள ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தினா். இச் சோதனையில் அந்த ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்த கோடீஸ்வரியை போலீஸாா் மீட்டனா்.

பின்னா் கோடீஸ்வரி மீட்கப்பட்டது குறித்து சென்னை போலீஸாருக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். இது குறித்து தகவலறிந்த கோடீஸ்வரியின் பெற்றோா், பிகாருக்கு விமானம் மூலம் சென்றனா்.அங்கு கோடீஸ்வரியை போலீஸாா், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இதற்கிடையே போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணவி தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.30 லட்சத்துடன் வீட்டில் இருந்து வெளியே, பிகாருக்கு சென்றிருப்பது தெரியவந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com