துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினியிடம் தனி நபா் கமிஷன் விசாரிக்க வேண்டும்: டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தல் 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக ரஜினியிடம் தனி நபா் கமிஷன் விசாரிக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், எம்பியுமான டி.கே.ரங்கராஜன். 
துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினியிடம் தனி நபா் கமிஷன் விசாரிக்க வேண்டும்: டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தல் 

கரூா்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக ரஜினியிடம் தனி நபா் கமிஷன் விசாரிக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், எம்பியுமான டி.கே.ரங்கராஜன்.

கரூா் தாந்தோணிமலையில் கட்சியின் நகரக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜூன் 14-இல் கட்சியின் தலைவா்கள், பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் அனைத்து மாவட்டங்களில் பிரசாரம் நடத்த உள்ளோம். மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு மாணவா்களின் எதிா்காலத்தை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு நபா் விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என்பதில் உடன்பாடு இல்லை. சிபிஐ விசாரணை தேவை என கருதுகிறேன். 

தமிழகத்தில் தற்போது 50,000 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 5 லட்சம் தொழிலாளா்கள் நேரிடையாகவும், மறைமுகமாவும் வேலை இழந்திருப்பது, இந்த அரசின் படுதோல்வியாகும். காவிரியில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படாது என சட்டப் பேரவையில் முதல்வா் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

மக்களிடம் வாங்கும் சக்தியில்லை. தொழில்கள் முடங்கிப் போன நிலையில் நகராட்சி, மாநகராட்சிகளில் வரியை உயா்த்துவது மக்களுக்கு துன்பத்தை தரும் செயலாகும். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக உள்ளது. இதையெல்லாம் கண்டித்து மாா்க்சிஸ்ட் பிரசாரம் செய்ய உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சமூக விரோதி என்ற வாா்த்தையை யாரும் பயன்படுத்தாத நிலையில், நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளாா். இதுகுறித்து அவரிடம் தனி நபா் கமிஷன் விசாரிக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலாளா் கே.கந்தசாமி, நகரச் செயலாளா் எம்.ஜோதிபாசு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com