குமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல படகு கட்டணம் உயர்வு

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகுகள்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகுகள்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. 
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. படகில் பயணம் செய்ய ஒரு நபருக்கு சாதாரண கட்டணமாக ரூ. 34, சிறப்புக் கட்டணமாக ரூ. 169, பள்ளி மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக ரூ. 17 வசூலிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், பூம்புகார் நிர்வாகம் படகு சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி நபருக்கு ரூ. 34ஆக இருந்த சாதாரண கட்டணம் ரூ. 50ஆகவும், ரூ. 169ஆக இருந்த சிறப்புக் கட்டணம் ரூ. 200ஆகவும், ரூ. 17ஆக இருந்த பள்ளி மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ. 25ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு உடனடியாக சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு முன்பு 2012-ஆம்ஆண்டு இதேபோல படகுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனிடையே, இந்த கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com